‘சட்டவிரோத பண பரிமாற்றம்’... வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

நாடு முழுவதும் மோசடி கும்பல்கள் செயல்படுகின்றன.
ரிசர்வ் வங்கி
Published on

சென்னை,

மோசடி கும்பல்

நாடு முழுவதும் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்றும் நோக்கில் சில நிறுவனங்கள் மற்றும் மோசடி கும்பல்கள் செயல்படுகின்றன. இதற்காக மாவட்டம் தோறும் ஏஜெண்டுகளை நியமித்து, அப்பாவி மக்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி பண பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன. குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, சில நாட்களுக்குப் பிறகு அதனை எடுத்துக் கொள்ளும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

இதுதொடர்பாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களின் பணத்தை தங்கள் வங்கி கணக்கில் பெறவோ, அனுப்பவோ ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உடந்தையாக இருப்பது பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும்.

இதனால் விசாரணை, கணக்கு முடக்கம், கைது மற்றும் சிறை தண்டனை போன்ற கடுமையான விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். மேலும், வங்கி கணக்குகள் மூலம் நடைபெறும் பெரிய அளவிலான பண பரிமாற்றங்கள் ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பில் இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com