பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.05 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு
Published on

ஈரோடு,

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு துவங்கியுள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், தமிழகத்தில் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 821 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.05 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையில் தர்போது 20.9 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ள நிலையில், பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com