சாத்தான்குளம் கொலை வழக்கு: நவ. 11ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை, நவ. 11ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவக்குகிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கு: நவ. 11ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல்
Published on

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், அந்த 10 போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில்பட்டி சிறைச்சாலை அதிகாரிகள் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை, நவ. 11ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவக்குகிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com