தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியது.
தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

கோடை விடுமுறைக்குப்பின், ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படுகின்றன. பள்ளி திறப்பதற்கு ஒரு வாரமே உள்ளதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்து தங்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வாட்டர் பாட்டில், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் ஆகியவை புக் கடைகளிலும், பேக் கடைகளிலும் ஸ்டேஸ்டனரி கடைகளிலும் வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில்,1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கி உள்ளது. அதன்படி,

* பள்ளிகள் திறக்கப்படும் அன்று முழுமையாக மாணவர்கள் பள்ளியை பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும்.

* மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.

* காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு தரமாக தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

*செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.

போன்றவை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com