அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி புதிய மனு தாக்கல்: விரைவில் விசாரணை

செந்தில்பாலாஜியின் புதிய மனு, சென்னை செசன்ஸ் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், 28-ந் தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்தநிலையில், அதே கோர்ட்டில் செந்தில்பாலாஜி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை அளிக்க வங்கி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்த பின்பு அதன் அடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என கூறி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com