வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
Published on

பொன்னேரி,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற அலகுகளில் 1230 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com