தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்ளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு (ஜூன் 27 வரை) தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று சுமார் 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com