மூத்த குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்க சிறப்பு ஆணையம்: தமிழக அமைச்சர்களிடம் சட்ட முன்வரைவு வழங்கல்

தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உரிமை ஆணையம் அமைக்க கோரி அமைச்சர் கே.ஜெகதீஸ்வரியிடம் தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கத்தின் நிறுவனர் சங்கர் சட்ட முன்வரைவினை வழங்கினார்.
அமைச்சர்களிடம் மனு
Published on

சென்னை,

அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் சட்ட முன்வரைவு வழங்கல்:

தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கத்தின் நிறுவனரும், எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு குழுவின் செயல் இயக்குநருமான சங்கர், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து முக்கிய சட்ட முன்வரைவு ஒன்றை வழங்கினார்.

தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம் 2026:

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 13.7 சதவீதம் உள்ளனர். மேலும் இந்தியாவிலேயே மூத்த பெருமக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே மூத்த பெருமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், அவர்களின் நலனைப் பேணுவதற்காகவும் "தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம்" ஒன்றை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெங்கடரமணனிடம் துண்டு பிரசுரம் வழங்கல்:

"தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம் 2026 (சட்ட முன்வரைவு)- என்ற இந்த வரைவு அறிக்கை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த சங்கர், எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட "நுகர்வோரே உங்களுக்காக" என்ற துண்டு பிரசுரத்தையும் அவரிடம் நேரில் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com