அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீப கொப்பரை வைக்கப்படும் இடத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு பூஜை

அண்ணாமலையார் மலை உச்சியில் காவல்துறை சார்பில் சிறப்பு பூஜை நடந் தது. அங்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on: 

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத் தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி அன்றைய தினம் சாமி சன்னதி முன்பு உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.

50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் இரவில் கோவிலை சுற்றி அமைந்துள்ள மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 24-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலையார் மலையின் மீது ஏறு வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த பக்தர்கள் மலையின் மீது அனு மதி பெற்று ஏறுவார்கள்.

மலையில் ஆய்வு

2024-ம் ஆண்டு மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் படி பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட் டுமே அனுமதி பெற்று மலையின் மீது ஏறினர். தொடர்ந்து இந்த ஆண்டு தீப மலையின் மீது பக்தர்கள் ஏற அனுமதி கிடைக்குமா?, இல்லையா? என்ற நிலை யில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையிலான போலீ சார் அண்ணாமலையார் மலையில் ஆய்வு செய்தனர்.

சிறப்பு பூஜை

முன்னதாக தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி மலை உச்சியில் மகா தீப கொப்பரை வைக்கப்படும் இடத்தில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து போலீசார் 2,668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது ஏறி பக்தர்கள் செல்வதற்கு பாதைகள் பாதுகாப்பாக உள்ளதா?, மகாதீப கொப்பரை வைக்கும் இடத்தில் பாதுகாப்பு வசதிகள் உள்ளதா?, பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

X