முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

முருகன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
Published on

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. உலக மக்கள் நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், சிறப்பு யாகம் நடந்தது. அதேபோல விஜயகரிசல்குளத்தில் உள்ள வழிவிடு பாலமுருகன் கோவிலிலும் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com