

சென்னை,
அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவலாகும்.
சம்பந்தப்பட்ட வீடியோ கடந்த 2022-ம் ஆண்டிலேயே வெளியானது. பழைய வீடியோவை தற்பொழுது அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த சம்பவம் போல சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.