

சென்னை,
தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் பாம்புகோவில் சந்தையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதபூஜையையொட்டி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06089) அக்டோபர் 19-ந் தேதியும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு (06090) அக்டோபர் 20-ந் தேதியும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் கூடுதலாக பாம்புகோவில் சந்தை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் போது, பகல் 10.56 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும்போது மாலை 3.44 மணிக்கும் இந்த சிறப்பு ரெயில் பாம்புகோவில் சந்தையில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.