

சென்னை,
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி பங்களிப்பாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை அவர்கள் வழங்கினார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளர் டி.சிவா, பொருளாளர் ஜி.தனஞ்செயன், துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.எஸ்.லலித்குமார், இணைச் செயலாளர்கள் முகேஷ் ஆர்.மேத்தா, எஸ்.வினோத் குமார் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து நிதியை வழங்கினர்.