தமிழ்நாடு காங்கிரசில் 77 கட்சி மாவட்டங்களுக்கென பார்வையாளர்கள் நியமனம் செய்து தலைமை உத்தரவு

7500 மண்டல காங்கிரஸ் தலைவர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
மாநில இயக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரசில் 77 கட்சி மாவட்டங்களுக்கென பார்வையாளர்கள் நியமனம் செய்து தலைமை உத்தரவு என்று மாநில இயக்க சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

புதிய மாவட்ட தலைவர்கள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்று தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

7500 மண்டல காங்கிரஸ் தலைவர்

இயக்க சீரமைப்பின் இரண்டாம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கும் திட்டத்தை தமிழக காங்கிரஸ் துவங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 75000 வாக்குச்சாவடிகளை, பத்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சுமார் 7500 மண்டல காங்கிரஸ் தலைவர்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

முன்னால் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்

மாவட்ட அளவில் இந்த பணிகளை மாவட்ட தலைவர்களோடு இணைந்து செயல்படுத்திட 77 கட்சி மாவட்டங்களுக்கு, இயக்கப்பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற கீழ்க்கண்ட 77 முன்னால் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. ஒப்புதலோடு பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்டம் பார்வையாளர்

1. வடசென்னை கிழக்கு வி.எம்.சி. மனோகரன்

2. வடசென்னை மேற்கு என்.கே. பகவதி

3. மத்தியசென்னை கிழக்கு ஈ.பி. ரவி

4. மத்தியசென்னை மேற்கு ஏ. ரெங்கசாமி

5. தென்சென்னை கிழக்கு ஆர். கிருஷ்ணன்

6. தென்சென்னை மத்தி கே. சங்கரபாண்டியன்

7. தென்சென்னை மேற்கு வீ. கார்த்திகேயன்

8. திருவள்ளுர் வடக்கு எஸ்.வி. சரவணன்

9. திருவள்ளுர் தெற்கு வி. முருகேசன்

10. ஆவடி ஆர்.என். அமிர்தராஜா

11. செங்கல்பட்டு வடக்கு கே. தென்னரசு

12. செங்கல்பட்டு தெற்கு மக்கள் ஜி. ராஜன்

13. காஞ்சிபுரம் டி.டி.கே. சித்திக்

14. விழுப்புரம் வடக்கு மோகன் குமாரராஜா

15. விழுப்புரம் மத்தி சி.எஸ். ஜெயக்குமார்

16. கள்ளக்குறிச்சி டி. ரவிச்சந்திரன்

17. கடலூர் தெற்கு கே.டி. உதயம்

18. கடலூர் மத்தி என். ரங்கபாஷ்யம்

19. கடலூர் மேற்கு காஞ்ஜி ஜி.வி. மதியழகன்

20. திருவண்ணாமலை வடக்கு பேங்க் கே. சுப்பிரமணியன்

21. திருவண்ணாமலை தெற்கு எஸ்.எம்.பி. துரைவேலன்

22. ராணிப்பேட்டை அம்மாபேட்டை எம். பாண்டியன்

23. திருப்பத்தூர் எம். ராஜரத்தினம்

24. வேலூர் மத்தி பி.ஏ. சித்திக்

25. வேலூர் மாநகர் ஏ.பி. பாஸ்கர்

26. கிருஷ்ணகிரி கிழக்கு ஆர்.டி.வி. சீனிவாசகுமார்

27. கிருஷ்ணகிரி மேற்கு ஆர். சுந்தரமூர்த்தி

28. தருமபுரி எம்.பி. ரஞ்சன்குமார்

29. சேலம் மாநகர் சிவ ராஜசேகரன்,

30. சேலம் கிழக்கு எஸ். திலகர்

31. சேலம் மேற்கு பி. சத்தியமூர்த்தி

32. நாமக்கல் கிழக்கு ஆர். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ

33. நாமக்கல் மேற்கு என்.வி. செந்தில்நாதன்

34. ஈரோடு மாநகர் டி. தமிழ்செல்வன்

35. ஈரோடு வடக்கு எஸ். மகீந்திரன்

36. ஈரோடு தெற்கு ஆர்.பி. ரமேஷ்

37. திருப்பூர் மாநகர் டி.வி. துரைராஜ்

38. திருப்பூர் வடக்கு பி.எஸ். ஜெய்கணேஷ்

39. திருப்பூர் தெற்கு ஏ. சங்கர்

40. நீலகிரி அசோகன் சாலமன்

41. கோவை மாநகர் எஸ். ராஜ்குமார்,முன்னாள் எம்.எல்.ஏ

42. கோவை வடக்கு டி.ஆர். லோகநாதன்

43. கோவை தெற்கு கூடலூர் எம்.பி. முருகேசன்

44. திண்டுக்கல் மாநகர் எஸ். தளவாய் பாண்டியன்

45. திண்டுக்கல் கிழக்கு சிறுவை டி. ராமமூர்த்தி

46. திண்டுக்கல் மேற்கு ஆர்.வி.ஜே. சுரேஷ்

47. கரூர் முகமது குலாம் மொய்தீன்

48. திருச்சி மாநகர் எம்.எஸ். திரவியம்,

49. திருச்சி வடக்கு இல. பாஸ்கரன்

50. திருச்சி தெற்கு பி. சிவசுப்பிரமணியன்

51. பெரம்பலூர் ஜெ. நவீன்குமார்

52. அரியலூர் எஸ். பிரசாத்

53. மயிலாடுதுறை வி.எம். பினுலால் சிங்

54. நாகப்பட்டினம் இராமசுப்புராம்,முன்னாள் எம்.எல்.ஏ

55. திருவாரூர் எம். தெய்வேந்திரன்

56. தஞ்சாவூர் மாநகர் வி.பி. அண்ணாமலை

57. தஞ்சாவூர் வடக்கு கே. வீரபாண்டியன்

58. தஞ்சாவூர் தெற்கு ஜி.ஆர். சுப்பிரமணியன்

59. புதுக்கோட்டை வடக்கு இளையராஜா

60. புதுக்கோட்டை தெற்கு என். தனபால்

61. சிவகங்கை துரை சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ

62. மதுரை மாநகர் ஏ. தமிழ்செல்வன்

63. மதுரை வடக்கு பி.ஜி. ராஜேந்திரன்

64. மதுரை தெற்கு என். ஜெயபிரகாஷ்

65. தேனி எம்.என். விஜயசுந்தரம்

66. விருதுநகர் கிழக்கு மன்னை மதியழகன்

67. விருதுநகர் மேற்கு பி. செல்வகுமார்

68. இராமநாதபுரம் ஜி. ராஜேந்திரன்

69. தூத்துக்குடி மாநகர் சி. பஞ்சாட்சரம்

70. தூத்துக்குடி வடக்கு பூவை ஜேம்ஸ்

71. தூத்துக்குடி தெற்கு எம்.ஏ. முத்தழகன்

72. திருநெல்வேலி மாநகர் ஆர். கலைச்செல்வன்

73. திருநெல்வேலி கிழக்கு பி. டீக்காராமன்

74. தென்காசி எஸ். பிரபு

75. கன்னியாகுமரி கிழக்கு எஸ்.கே. அர்த்தனாரி

76. கன்னியாகுமரி மேற்கு எம். வசந்தராஜ்

77. நாகர்கோவில் மாநகர் டி. திருச்செல்வம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com