ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும்-தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது.
தமிழக அரசு
Published on: 

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியை பெருமைப்ப டுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், 5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக் கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும், திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழ் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கு வழங்கியும் சிறப்பிக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X