காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை

இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் பூங்கா, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் பகுதியில் அமைந்துள்ளது.
காற்றாலை
Published on
Updated on

சென்னை,

நெல்லையில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தின் காற்றாலை மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதாலும், காற்றின் வேகம் அதிகரிப்பதாலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

சாதனை

தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின்சார உற்பத்தித்திறன் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி ஒரே நேரத்தில் நேற்று 5 ஆயிரத்து 834 மெகாவாட் அளவைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

மின்சார உற்பத்தியில் முதலிடம்

காற்று சீராக வீசும் மாதங்களில், தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 110 முதல் 113 மில்லியன் யூனிட்டுகளுக்கும் அதி கமான மின்சாரம் ஒரே நாளில் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தை முழுமை யாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சாதனை மூலம் தென் மாநிலங்களில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

முப்பந்தல்

இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் பூங்கா, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் பகுதியில் அமைந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் சுமார் 1,500 மெகாவாட்டாகும். தேசிய அளவில் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com