தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 4 வரை நீட்டிப்பு


தரமணி: இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 4 வரை நீட்டிப்பு
x

தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 4 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை

சென்னை தரமணி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026-ம் கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் 4 ஆண்டு கால பட்டப்படிப்பிற்கான கீழ்க்கண்ட 6 பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையத்தளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

1.இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு)- Bachelor of Visual Arts (Cinematography)

2.இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை)- Bachelor of Visual Arts (Digital Intermediate)

3.இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு)- Bachelor of Visual Arts (Audiography)

4.இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்)- Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5.இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு)- Bachelor of Visual Arts (Film Editing)

6.இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் )- Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

இளங்கலைக் காட்சிக்கலை பட்டப்படிப்புக்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் 4.6.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கலை ஆர்வம் உள்ள மாணவ/மாணவியர் விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு www.filminstitute.tn.gov.in எனும் இணையத்தளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பயனாளர் கையேட்டின் (User Manual) அறிவுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களுடன் 4.6.2025 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story