மா.கம்யூ., ம.நீ.ம., வி.சி.க.வுடன் இழுபறி: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு சிக்கலுக்கு என்ன காரணம்?

இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறியதால், கூட்டணி கட்சிகள் அதிர்ச்சிக்குள்ளாகின.
மா.கம்யூ., ம.நீ.ம., வி.சி.க.வுடன் இழுபறி: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு சிக்கலுக்கு என்ன காரணம்?
Published on

சென்னை,

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., இந்த முறை (2026) 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது.

கடந்த தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிட்டபோதும், கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க. (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), மனிதநேய மக்கள் கட்சி (2), அகில இந்திய பார்வர்டு பிளாக் (1), தமிழக வாழ்வுரிமை கட்சி (1), மக்கள் விடுதலை கட்சி (1), ஆதிதமிழர் பேரவை (1) ஆகிய கட்சிகளும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனிலேயே போட்டியிட்டன. ஆக மொத்தம் உதயசூரியன் சின்னத்தில் களம் கண்டவர்கள் 188 பேர்.

Also Read
4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மா.கம்யூ., ம.நீ.ம., வி.சி.க.வுடன் இழுபறி: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு சிக்கலுக்கு என்ன காரணம்?

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ. உள்பட மேலும் 13 கட்சிகள் கூடுதலாக இணைந்துள்ளன. ஏற்கனவே, கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும், தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுவந்தன.

கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

ஆனால், கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், கூடுதல் தொகுதிகள் தரமுடியாது, மாறாக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறியதால், கூட்டணி கட்சிகள் அதிர்ந்து போயின.

என்றாலும், காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி, கடந்த முறையைவிட 3 தொகுதிகள் கூடுதலாக, அதாவது 28 இடங்களை பெற்றுக்கொண்டது. இதேபோல், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடினாலும், ம.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள் குறைவாகவும் (4), இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 தொகுதி குறைவாகவும் (5) ஒதுக்கப்பட்டது.

தி.மு.க. மறுப்பு

தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கூடுதல் தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியில் போராடி வருகின்றன.

ஆனால், தி.மு.க. தரப்போ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த முறையைவிட ஒன்று குறைவாக 5 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறையை போல 6 தொகுதிகளும், புதிய வரவான மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகளும் ஒதுக்க முன்வந்துள்ளது. அதுவும், மக்கள் நீதிமய்யம் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனிலேயே போட்டியிடவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Also Read
தொகுதி பங்கீடு: அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ்
மா.கம்யூ., ம.நீ.ம., வி.சி.க.வுடன் இழுபறி: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு சிக்கலுக்கு என்ன காரணம்?

கூட்டணி கட்சிகள் போர்க்கொடி

அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் கடைசியாக இணைந்த தே.மு.தி.க.வுக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே, அந்தக் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இதை கேள்விப்பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. கூட்டணிக்கு இப்போது வந்த கட்சிக்கு, அதுவும் வாக்கு வங்கியில் எங்களைவிட குறைவான சதவீதம் வைத்துள்ள கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் தொடரும் சிக்கல்

தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் கொடுத்து, கூட்டணிக்குள் கொண்டுவர தி.மு.க. முடிவுசெய்ததற்கு, அ.தி.மு.க.வுடனும் தே.மு.தி.க. கூட்டணி பேசிவந்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே, கூடுதல் தொகுதிகள் தர தி.மு.க. சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தே.மு.தி.க. வந்ததால்தான், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய 3 கட்சிகளும் தங்களுடைய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா?, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டு இருப்பதால், தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com