சட்டமன்றம் ரீல்ஸ்-க்காகவே நடைபெறுகிறது - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என திமுக எம்.பி,, கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

சட்டமன்றம் ரீல்ஸ்-க்காகவே நடைபெறுகிறது
திமுக எம்.பி. கனிமொழி
Published on

சென்னை,

சட்டமன்றமே ரீல்ஸ்காக தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தருகிறார்கள் என தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தவெக ஆட்சிக்கு வந்தபிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகி கொண்டே வருகின்றன. குற்றங்களில் பல குற்றங்களை செய்திருப்பவர்கள் தவெகவினராக இருக்கிறார்கள். காவல் நிலைய மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது.

சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இந்த ஆட்சியில் மாறியிருக்கிறது. சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறது என்ற உணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com