20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

போடிமெட்டு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
Published on

மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 23). இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 2 பேருடன் நேற்று தேனி மாவட்டம் போடி அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அங்கு சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு, 3 பேரும் திரும்பி மதுரை நோக்கி புறப்பட்டனர். காரை கார்த்திக்ராஜா ஓட்டினார். போடி அருகே போடிமெட்டு மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அவர்கள் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார்த்திக்ராஜா மற்றும் அவரது 2 நண்பர்களும் காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து போடி குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com