காவிரிதான் தமிழகத்தின் உயிர் நாடி.. கர்நாடகாவில் அணை கட்டவிடக்கூடாது - அன்புமணி

காவிரியை காப்பாற்ற நாம் ஒன்றுகூடுவோம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காவிரிதான் தமிழகத்தின் உயிர் நாடி.. கர்நாடகாவில் அணை கட்டவிடக்கூடாது - அன்புமணி
Published on

பவானி,

கர்நாடக மாநிலத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், பவானியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர் கூறியதாவது:-

காவிரிதான் தமிழகத்தின் உயிர் நாடி. கர்நாடகாவில் அணையை கட்டவிடக்கூடாது, மத்தியில் காங்கிரஸ், பாஜக வந்தாலும் கர்நாடகாவுக்கு சாதகமாகத்தான் இருப்பார்கள்.

வழக்குகள் போட்டால்தான் நியாயம் கிடைக்கும். தமிழகத்துக்கு தீர்வு நீதித் துறைதான். சூப்பர் எல்-நினோவால் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் அணை கட்டினால் நமக்கு பாதிப்பு ஏற்படும்.

காவிரியை காப்பாற்ற நாம் ஒன்றுகூடுவோம். ஒற்றுமையாக இருந்து மேகதாது அணையை தடுப்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com