

மதுரை,
அறுபடைவீடுகளில் 6-வது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவில், இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“பழமுதிர்சோலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தோம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சரியாக செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்ல முறையில் சாமி தரிசனம் செய்தனர். அடுத்தடுத்து பல கோவில்களில் கும்பாபிஷேகம் விழாக்கள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மீனாட்சி அம்மன் கோவிலில் எந்த தாமதமும் இன்றி திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெறும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.