காசி விஸ்வநாத‌ர் கோவில் கும்பாபிஷேக செலவுப் பட்டியல் என பரவும் தகவல் தவறு - சரிபார்ப்பகம் விளக்கம்

செலவுப் பட்டியலில் சிவாச்சாரியர் சம்பளம் ரூ.45 லட்சம் என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
காசி விஸ்வநாத‌ர் கோவில் கும்பாபிஷேக செலவுப் பட்டியல் என பரவும் தகவல் தவறு - சரிபார்ப்பகம் விளக்கம்
Published on

தென்காசி ,

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செலவுப் பட்டியலில் சிவாச்சாரியர் சம்பளம் ரூ.45 லட்சம் என உள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தென்காசி காசிவிஸ்வநாத‌ சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக செலவுப் பட்டியல் என பரவும் தவறான தகவல்

பரவும் செய்தி

தென்காசி காசிவிஸ்வநாத‌ சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செலவுப் பட்டியலில் சிவாச்சாரியர் சம்பளம் ரூ.45 லட்சம் என உள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவல்.

தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவிலுக்கு கடந்த 2025-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அதற்கான செலவினங்கள் தொடர்பான பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்தப் பட்டியலை தற்பொழுது நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான செலவினம் என இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com