மோட்டார் சைக்கிள் மோதி காய்கறி வியாபாரி பலி

சேந்தமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காய்கறி வியாபாரி இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி காய்கறி வியாபாரி பலி
Published on

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் மாவிலர் தெருவை சேர்ந்தவர் மகாமணி (வயது 52) காய்கறி வியாபாரி. இவர் அதிகாலை நேரத்தில் நாமக்கல் உழவர் சந்தைக்கு மொபட்டில் சென்று காய்கறிகள் வாங்கி சேந்தமங்கலம் பகுதியில் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் வழக்கம்போல் தனது மொபட்டில் சேந்தமங்கலத்தில் இருந்து செல்லும்போது அக்கிம்பட்டி அருகே இவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. தூக்கி வீசப்பட்ட மகாமணி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த மகாமணிக்கு வசந்தா (45) என்ற மனைவியும், 3 மகன், ஒரு மகள் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com