அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும். மேலும் நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளோடு வராத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று வகையான அட்டவணை தயாராக உள்ளது.

அரசு சார்பில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29279 மாணவர்களும், 31,730 மாணவர்கள் இரண்டுக்கும் சேர்ந்து விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com