பரபரப்பான தேர்தல் முடிவு நேரத்தில் பெய்த மழை...சென்னையில் குளிர்ச்சி

பரபரப்பான தேர்தல் முடிவு நேரத்தில் சென்னையில் மழை பெய்துள்ளது.
பரபரப்பான தேர்தல் முடிவு நேரத்தில் பெய்த மழை...சென்னையில் குளிர்ச்சி
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், பரபரப்பான தேர்தல் முடிவு நேரத்தில் சென்னையில் மழை பெய்துள்ளது. அதன்படி, எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் குளிர்ச்சி நிலவியது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com