உதகையில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த மாணவி உயிரிழப்பு..!

போட்டி போட்டு சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உதகையில் அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த மாணவி உயிரிழப்பு..!
Published on

நீலகிரி,

உதகையில் பள்ளியில் கடந்த 6-ம் தேதி 4 பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவிகள் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அதிகளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சத்து மாத்திரை விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com