

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
அதன்படி, எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16865) இன்று முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். அதே போல, தஞ்சாவூரில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16866) திண்டிவனத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.