எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மின்வெட்டு இருந்தது - அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகளை காக்க, காவிரியில் கூடுதல் நீரை விட வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் மின்வெட்டு இருந்தது - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

கோவை,

கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, முதல்-அமைச்சர் விஜய் அங்கே சொல்வார். மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் தெளிவாக உள்ளார். மேட்டூர் அணைக்கு வரும் நீர் குறைவாக உள்ளது. 2017-18-ல் அதேநிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை காக்க, காவிரியில் கூடுதல் நீரை விட வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்

மின்வெட்டை கண்டித்து எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். அவர் ஆட்சியிலும் இதே நிலை இருந்தது. வெயில் காலம் என்பதால் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது.

சென்னையில் மின்சாரம் தேவை அதிகரித்து உள்ளது. கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும்போது உபகரணங்களும், கட்டுமான பணிகளும் தேவை.

திமுக ஆட்சியில் மின்சார துறையில் வளர்ச்சி பணியை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் மொத்தமாகவே அதற்கு ரூ.627 கோடி மட்டும்தான் செலவு செய்துள்ளார்கள். போதை பொருட்கள் கட்டுப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் சினிமா பிரபலங்களின் ஆட்சி என்ற பாஜக புகாருக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி யார்? என செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com