வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கோலியனூர் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Published on

வளவனூர், 

வளவனூர் அருகே கோலியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி மூலவருக்கும், உற்சவ பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் வரதராஜ பெருமாள் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோலியனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com