திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு - கவர்னர் அர்லேகர் இரங்கல்

இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.
கவர்னர் அர்லேகர்
Published on

சென்னை,

கவர்னர் அர்லேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான அம்மோனியா வாயு கசிவுச் சம்பவத்தால், பல தொழிலாளர்கள் காயமடைந்ததோடு, பல உயிர்களும் பலியாகியுள்ளன.

ஆழ்ந்த இரங்கல்

இந்தத் துரதிர்ஷ்டவசமான துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.

சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டு வரவும் நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com