டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

போளூர் அருகே டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நடேசன் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். அவரது நண்பர் பாக்யராஜ். இருவரும் போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து டிப்பர் லாரியில் நிரப்பி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராம்குமார், பாக்யராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com