திருப்பத்தூர்: நர்சிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
திருப்பத்தூர்: நர்சிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செமஸ்டர் தேர்வில் தோல்வி

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவன் (20). இவர் ஈரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஜே.கே.எம். தனியார் நர்சிங் கல்லூரியில் மருந்தகம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படும் நிலையில் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டடார்.

வேறு ஏதேனும் காரணமா?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மாணவரின் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com