சூரக்குழி கிராமத்தில் மயான கொள்ளை திருவிழா

ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
சூரக்குழி கிராமத்தில் மயான கொள்ளை திருவிழா
Published on

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசையன்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா நேற்று காலை தொடங்கியது. அங்காளம்மன், பாவாடைராயன் சுவாமிகளுக்கு பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அங்காள பரமேஸ்வரி விஸ்வரூபம் கொண்டு நிசானி உடலை கிழித்து குடல் பிடுங்கி வள்ளாலகோட்டை இடித்து வீதியுலா புறப்பட்டார். இதில் பக்தர்கள் பாவாடைராயன், அங்காளம்மன், காட்டேரி, ரத்தக்காட்டேரி போன்று வேஷமிட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை சூரக்குழி அருகே உள்ள மயானத்தில் மயானக்கொள்ளை விடுதல் விழா நடைபெற்றது. இதில் ஆண்டிமடம், சூரக்குழி, சூனாபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com