தவெக வேட்பாளர் அன்னை வி.ஜி. சரவணனின் வேட்பு மனு திருப்பி அளிப்பு - காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விஜய் தலைமையிலான தவெக சார்பில் அன்னை வி.ஜி. சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தவெக வேட்பாளர் அன்னை வி.ஜி. சரவணனின் வேட்பு மனு திருப்பி அளிப்பு - காரணம் என்ன?
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விஜய் தலைமையிலான தவெக சார்பில் அன்னை வி.ஜி. சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்க்காக ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மேலும் தேர்தல் அதிகாரி செந்தில்வேல் முருகனிடம் தனது வேட்பு மனுவை கொடுத்தார்.

அந்த மனுவை வாங்கிய அதிகாரி அதை முழுமையாக பார்க்கும் போது மனுவின் முன் பக்கம் நிரப்பி இருந்ததாகவும் ஆனால் இடையில் உள்ள பக்கம் நிரப்பபடாமல் இருந்ததாக தெரிகிறது இதனை தொடர்ந்து அந்த மனுவை வேட்பாளரிடம் திருப்பி கொடுத்தார். மேலும் அந்த மனுவில் உள்ள அனைத்து பக்கங்களையும் சரியாக நிறைவு செய்து நாளை கொண்டு வருமாறு திருப்பி அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தினால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com