தவெக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது - ரகுபதி விமர்சனம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் ஒரு முதல்-அமைச்சர் வந்து சென்றுள்ளதாக ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
தவெக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது - ரகுபதி விமர்சனம்
Published on: 

சென்னை,

முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;

புதிய திட்டங்கள் இல்லை

தமிழ்நாடு முதல்வர் விஜய் ப்ரோ புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நிறைய புதிய திட்டங்கள் வரும் என புதுக்கோட்டை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனா ஜோசியர் சொன்னதால் ஏற்கனவே ஏற்பாடு செய்த பெரிய இடத்தை விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. எந்த புதிய திட்டங்களும் அறிவிக்காமல் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார். முதல்வர் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வரவழைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் கல்லூரி செமஸ்டர் தேர்வை தள்ளிவைத்தனர்.

மக்கள் ஏமாற்றம்

அடுத்ததாக புதிய பேருந்து நிலையத்தைத் திறக்கப் போனார். சரி, திறந்த உடனே நிறைய புதிய வழித்தடங்களிலே புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்குப் பயன் தரும் வகையிலே பேருந்துகள் இயக்கப்படும் என எல்லா மக்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். அங்கேயும் ஏமாற்றம். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஏமாற்றம். புதிய வழித்தடங்கள் தொடங்குவார் என்று எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். எனவே அந்த புதுக்கோட்டை விசிட் என்பது பெயிலியரான விசிட்டாக இருந்தாலும், அந்த மாவட்ட மக்களை ஏமாற்றிய ஒரு விசிட்டாகும். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் ஒரு முதலமைச்சர் வந்து சென்றிருக்கிறார்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் இந்த அரசு தடுமாறுகிறது. மின்கட்டண உயர்வால் தடுமாறுகிறது. பால் கிடைக்காமல் தடுமாறுகிறது. கிடைச்சாலும் விலை ஜாஸ்தியா கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். தீபாவளியை முன்னிட்டு எல்லா பொருளும் விலை உயர்ந்துவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளியை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு எல்லாமே விலையேறி இருக்கிறதே தவிர, மக்களிடத்திலே வாங்கும் சக்தியும் கிடையாது, மகிழ்ச்சியும் கிடையாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X