காவிரி விவகாரத்தில் தவெக அரசின் சிறுபிள்ளைத்தனம்": டிடிவி தினகரன் பேட்டி

ஆட்சி அமைப்பதற்காகவே தவெக தரப்பினர் பல தில்லுமுல்லுகளையும் செய்துள்ளனர்.
டிடிவி தினகரன்
Published on

சென்னை,

தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது" என்று தெரிவித்தார். காவிரி நதிநீர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன், பேசியதாவது:-

சிறுபிள்ளைத்தனமானது

தமிழகத்தில் 40 முதல் 50 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் அமைச்சர்களாக இருந்து அரிய அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளை கேட்டு, கூட்டு விவாதம் நடத்தி முடிவெடுக்காமல் தவெக அரசு தன்னிச்சையாக செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது.

எதிர்க்கட்சிகளை சந்திக்க பயம்

தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகளையோ அல்லது மற்ற அரசியல் கட்சி தலைவர்களையோ நேரில் சந்தித்து பேச ஒருவித தயக்கமும் அச்சமும் உள்ளது. இதனால்தான் அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறார்கள்.

தில்லுமுல்லு ஆட்சி

ஆட்சி அமைப்பதற்காகவே தவெக தரப்பினர் பல தில்லுமுல்லுகளையும் செய்துள்ளனர். அதன் காரணமாகவே திமுக தலைவரையோ அல்லது அதிமுக பொதுச்செயலாளரையோ நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com