திண்டிவனத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட இரண்டு ரெயில்கள் நின்று செல்லும்

சென்னை எழும்பூர் - மங்களூரு செல்லும் ரெயிலும் திண்டிவனத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்.
திண்டிவனத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட இரண்டு ரெயில்கள் நின்று செல்லும்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் இடையே தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16865/16866) வரும் 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அதாவது, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும்போது, அதிகாலை 12.13 மணி முதல் 2 நிமிடமும், தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் திரும்பும்போது அதிகாலை 2.13 மணி முதல் 2 நிமிடமும் நின்று செல்லும்.

மேலும், சென்னை எழும்பூர்- மங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்கள் 16159/16160) வரும் 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அதாவது, சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும்போது, அதிகாலை 12.58 மணி முதல் 2 நிமிடமும், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் திரும்பும்போது, அதிகாலை 1.15 மணி முதல் 2 நிமிடமும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, பரிசார்த்த முறையிலேயே இந்த இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திண்டிவனத்தில் நின்று செல்லும். பயணிகளிடம் கிடைக்க இருக்க வரவேற்பை பொறுத்தே அது நிரந்தரமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com