கவர்னர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம் - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய கவர்னரை கடுமையா கண்டிச்சோம்.
உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

எப்போதுமே மியூட்-ல இருக்கவர் முதல்-அமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல கவர்னர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடிச்சு இருக்காங்க.

திருவள்ளுவர் நாள்

தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய கவர்னரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.

கடும் கண்டனம்

வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட அனுமதி கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதல்-அமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதல்-அமைச்சர் அமைதியா இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com