

சென்னை,
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த திமுக நிர்வாகி ஒருவர் சிறிய மாடல் சோபாவை அன்பளிப்பாக கொண்டு வந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். காலை முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று அவருக்கு புத்தகங்கள், சால்வைகள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.
இந்நிலையில், வாழ்த்து தெரிவிக்க வந்த திமுக நிர்வாகி ஒருவர் சிறிய அளவிலான மாடல் சோபாவை கையில் எடுத்து வந்து பரிசாக கொடுத்தார். தமிழ்நாடு அரசியலில் 'சோபா மாடல்' என்ற விமர்சனம் சமீபகாலமாக பேசப்பட்டு வரும் சூழலில், இந்த பரிசு பொருள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.