

சென்னை,
சித்ரா பவுர்ணமியையொட்டி, விழுப்புரம் - காட்பாடி இடையே திருவண்ணாமலை வழியாக முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரத்தில் இருந்து நாளை (30-ந்தேதி) மே 1, 2 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் நள்ளிரவு 1.50 மணிக்கு காட்பாடியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், காட்பாடியில் இருந்து மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2.05 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் காலை 5 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.
இந்த சிறப்பு மெமு ரெயில் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு, வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.