வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு

பராமரிப்பு பணிகளுக்காக 2 நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு இருந்தது.
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு
Published on

வண்டலூர்,

மிக்ஜம் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளநீர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் புகுந்தது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளக்காடானது. மேலும் பூங்காவில் 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டு பூங்கா மூடப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com