'ஜனநாயகன்' வெற்றி பெற வேண்டி அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

திரைப்பட வெற்றிக்காகவும், தணிக்கை சான்றிதழ் தடைகளைத் தாண்டியும் ரசிகர்கள் நடத்திய இந்த வேண்டுதல் நிகழ்வு இணையத்தில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஜனநாயகம் திரைப்பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.
மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்
Published on

சென்னை,

'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென்று விஜய் ரசிகர்கள் அம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு வினோத நேர்த்திகடன் செலுத்தினர்.

முதலமைச்சரின் கடைசி திரைப்படம்

தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின், அவரது கடைசித் திரைப்படமாக திரைக்கு வந்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வினோத வழிபாடு

இந்நிலையில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரண்ட விஜய் ரசிகர்கள், படம் உலகளவில் இமாலய வெற்றி பெற வேண்டும் என வேண்டி அம்மன் கோவில் வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு முட்டிப்போட்டபடி, வெறும் தரையில் சாதத்தைப் கொட்டி, மண்ணோடு பிசைந்து 'மண்சோறு' சாப்பிட்டு வினோத முறையில் தங்களது அசுர பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

நெட்டிசன்கள் - பொதுமக்கள் விமர்சனம்

திரைப்பட வெற்றிக்காகவும், தணிக்கை சான்றிதழ் தடைகளைத் தாண்டியும் ரசிகர்கள் நடத்திய இந்த வேண்டுதல் நிகழ்வு இணையத்தில் கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது."ஒரு திரைப்படத்திற்காக ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இப்படி மண்ணில் சோறு போட்டு சாப்பிடுவது அநாகரிகமானது, தேவையற்றது" என பொதுமக்களும் நெட்டிசன்களும் தங்களது கண்டனங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், தளபதி விஜய் மீதான தங்களின் அலாதி அன்பின் வெளிப்பாடே இது என அவரது ரசிகர்கள், இந்த செயல் நியாயம் தான் என்று கூறி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com