கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா- தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழாவையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
கள்ளழகர் கோவிலில் விஜயதசமி விழா- தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
Published on

அழகர்கோவில்

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நடந்து முடிந்தது. இதில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் கல்யாணசுந்தரவல்லி தாயார் அலங்கார பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று 10-வது நாள் விஜயதசமியையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி, மேளதாளம் முழங்க, தீவட்டி சகல பரிவாரங்களுடன் சுவாமி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து அம்பு விடும் மண்டப பகுதிக்கு சுவாமி சென்றார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன் பூஜைகள் தீபாராதனை நடந்தது. பின்னர் கள்ளழகர் பெருமாள் அம்பு எய்தல் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வந்த வழியாக சுவாமி கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். இத்துடன் நவராத்திரி, விஜயதசமி, திருவிழாக்கள் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com