ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 700 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி நீர் படிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com