அரியர் தேர்வு தொடர்பாக தெளிவான அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை போக்க வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை

அரியர் தேர்வு தொடர்பாக தெளிவான அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை போக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியர் தேர்வு தொடர்பாக தெளிவான அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை போக்க வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருக்கிறார்.

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியிருக்கிறார். அந்த உறுதியுடன் அரியர் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறைக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது மாணவர்களிடையே குழப்பதை உண்டாக்கியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறியியல் அரியர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com