அஞ்சுகிராமம் அருகே மேற்கு வங்க பெண் விஷம் குடித்து தற்கொலை

அஞ்சுகிராமம் அருகே மேற்கு வங்க பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம் அருகே மேற்கு வங்க பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே ராமனாதிச்சன் புதூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கணேஷ் பகாரியா (வயது 47) என்பவர் மனைவி மாலதி (45) மற்றும் மகனுடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மாலதிக்கும், செங்கல் சூளை உரிமையாளருக்கும் சம்பளம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. .

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை மாலதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மாலதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com