

தேனி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 26-ந்தேதி இரவு சிறை காவலர்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் நுழைவு வாயில் வழியாக தப்பி ஓடினர். கைதிகள் தாக்கியதில் 3 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தப்பி ஓடியவர்கள் தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 24), கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த சோலை முகிலேஸ்வரன் (28), மதுரை மாவட்டம் சுந்தரராஜபு ரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற மதன் (25), ராஜ்குமார் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திருப்பதி (23), டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த பொன்முத்துச்செல்வம் (26), காந்திநகர் மேலமடையை சேர்ந்த பிரசாந்த் என்ற லிங்கபிரசாந்த் (25), ராஜா சிக்கந்தர் (24), கீழக்குயில்குடியை சேர்ந்த நிஷாந்த் (22), வாடிப்பட்டி முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த முத்து இளங்கோவன் (22), பெருங்குடி பர்மா காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (25), ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா (36), மேலஅனுப்பானடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (25), சேலம் தடங்கப்பட் டியை சேர்ந்த சபரிநாதன் (23), சிவகங்கை மாவட்டம் கீழக்கந்தானியை சேர்ந்த தருண்குமார் (25), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த பாண்டி செல்வம் (25), கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த ரெஜின் (24) ஆகியோர் என்று தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தப்பி ஓடிய வர்கள் மீது 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில், 48 மணி நேரத்திற்குள் தப்பி ஓடிய 17 கைதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிபட்ட நிலையில் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், கைதிகள் தப்பிக்கும் யோசனையை முன்வைத்தது மாற்றுத்திறனாளி லிங்க பிரசாத்; மாற்றுத்திறனாளி சொன்ன யோசனையை கேட்டு சிறையில் கைதிகள் தப்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.