

திருவாரூர்,
தவெகவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? என மன்னார்குடி எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் எஸ்.காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மன்னார்குடி சுற்றுவட்ட சாலைக்கு இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ.46 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. மன்னார்குடியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். தற்போது வேலை இல்லாமல் சிரமப்படும் விவசாய தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்தினேன்.
இதை கவனமாக கேட்டுக்கொண்ட முதல்-அமைச்சர், திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு குழுவை அனுப்பி இங்கு விவசாயிகள். விவசாய தொழிலாளர்கள் படும் துயரங்களை போக்க நடவடிக்கை எடுப் போம் என உத்தரவாதம் அளித்துள்ளார். அதேபோல் தி.மு.க.வும் ஒரு குழுவை அனுப்பி இருப்பதை வரவேற்கி றோம். அந்த வகையில் அவர்கள் முதல்-அமைச்சருக்கு ஆலோசனை சொல்லலாம் தவறில்லை.
ஆனால் ஆளுகின்ற முதல்-அமைச்சரால் மட் டுமே உதவி செய்ய முடியும். எதிர்க்கட்சி அறிக்கையை மட்டுமே கொடுக்க முடியும். அமைச்சர் செங்கோட்டையனை நானும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியனும் சந்தித்து டெல்டா மாவட்டங்களின் வறட்சி நிலவரம் கண்டறிய ஒரு கமிட்டி அனுப்புங்கள் என்று வலியுறுத்தினோம்.
கடந்த மே மாதம் 12-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பங்கு பெற்றேன். அன்று மதியமே அ.ம.மு.க.வில் இருந்து என்னை விலக்கி விட்டார்கள். 13-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவாக நான் கை தூக்கினேன். அதன்பிறகு சட்டசபையில் அனைத்து நடவடிக் கைகளுக்கும் ஆதரவாக இருந்தேன். அதனால் தான் மன்னார்குடி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வர முடிந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் தான் நிறைய திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது.
த.வெ.க.வில் இணைவீர்களா? என கேட்கிறார்கள். அதற்கான சூழ்நிலை வரும்போது உங்களிடம் கூறிவிட்டுத்தான் இணைவேன். அதனால் எந்தவித நெருக்கடியும் எனக்கு கிடையாது. எந்த நெருக்கடியும் என்னை கட் டுப்படுத்தாது. நான் ஒரு தனி எம்.எல்.ஏ. அரசியல் ரீதியாக முடிவெடுக் கும்போது அனைவரிடமும் கூறி விட்டுத்தான் முடிவு எடுப்பேன். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் என்று நம்புகிறேன். மன்னார்குடி நகரை ஒரு தூய்மையான நகராக மாற் றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.