ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்கப்படுமா?

ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் இருந்து ஆவரந்தைக்கு பஸ்கள் இயக்கப்படுமா?
Published on

சோழபுரம் ஊராட்சியை சேர்ந்தது ஆவரந்தை கிராமம். இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயில்வதற்காக தினமும் ராஜபாளையம், முறம்பு, சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல இங்கிருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராஜபாளையத்திற்கு சென்று வருகின்றனர்.

இங்கு விளையும் பருத்தி, மிளகாய், வத்தல் போன்றவற்றை விவசாயிகள் ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு போய் விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ்வசதி இல்லை.

இந்த பகுதிக்கு பஸ் இயக்கப்படாததால் இங்குள்ள மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைவரும் 3 கி.மீ. தூரம் உள்ள ஆசிலாபுரம் சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் வெளியூர் சென்று வர முடியாத நிலை உள்ளது. ஆதலால் இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதியில் இருந்து தினமும் காலை, மாலை வேலைகளில் மட்டுமாவது பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இ்வ்வாறு பஸ் இயக்கினால் எண்ணற்ற கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறுவர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com